19. षट्त्रिंशद्रात्रம் - இதில் முதலிலும் கடைசியிலும் अतिरात्रங்கள்; நடுவில் நாலு अभिप्लवषडहங்களும், दशरात्रமும். விதி வாக்கியத்தில் षडहा भवन्ति - चत्वारो भवन्ति என்று இருப்பதைக் கொண்டு சந்தேஹம் - षडहம் ஆறு நாள்கள். அப்படி நாலு षडहங்கள்; ஆக 24 நாள்கள்; இவைகளை द्वादशाहத்தைப் போல் இரண்டு தடவை செய்கிறதா என்று. षडहம் என்பது ஆறு நாள்களில் செய்யப்படும் ஒரு கர்மம்; அதை நாலு தடவை செய்யவேண்டியதென்று தீர்மானம். (ताण्ड्य.ब्रा.अध्या-24, खण्डः-6; मीमांसा - अध्या-8, पा-3, अधि-3).
ताण्ड्य.ब्रा.अध्या-24, खण्डः-6